வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த இரத்மலானையை சேர்ந்த எல்டன் டெவோன் கெனி என்ற 16 வயது சிறுவன் நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி பிற்பகல் வேளையில் இருந்து, அவர் காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சி.சி.ரி.வி காணொளி காட்சிகளை ஆராய்ந்தபோது, குறித்த சிறுவன், காலி – கொழும்பு பிரதான வீதியில் மொரட்டுவை நோக்கி பயணித்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, நான்கு காவல்துறை குழுக்களின் மூலம், சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், குறித்த சிறுவன், நேற்றிரவு வீடுதிரும்பியதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.