நாட்டில், கடந்த 5 ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில், 5, 677 உந்துருளி செலுத்துநர்கள் பலியானதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான தலைக்கவசம் அணியாமை, அதிகரித்த வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்தியமை என்பனவே குறித்த உந்துருளி விபத்துக்களுக்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உந்துருளிகளால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக, நாடாளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் ஒன்று காலிமுகத்திடலில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.