28.9 C
Jaffna
Sunday, April 18, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று (27) 236 பேரின் மாதிரிகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 52 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், 150 கைதிகளிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்ட நிலையில், அவர்களில் 51 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவரது கணவர் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக கொழும்பில் பணியாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 463 பேரின் PCR பரிசோதனையில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட மூன்று நோயாளிகளுக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கொடிகாமத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 81 வயது வயோதிபப் பெண் ஒருவருக்கும் அவரது பேரனுக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டுPCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் ஆறு பேருக்குக் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி...

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி !

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து...

யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கு கெரோனா

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி...

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி !

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து...

யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கு கெரோனா

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை...

கிளிநொச்சி, யாழ் மாவட்டங்களில் 9 பாடசாலைகள் உடைத்து திருட்டு ! – மூன்று பேர் கைது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த...

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.ஹட்டன் - மல்லியப்பு சந்தி பகுதியில் மகளீர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர்...