February 25, 2021, 9:39 pm

அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினர் மூன்று மணி நேர விசாரணைக்குள்!!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சி பேரணியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் இன்று வெள்ளிக்கிழமை திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களின் பொலிசார் 3 மணிநேர விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரையிலான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சி பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கலந்து கொள்வதற்கு எதிரா திருக்கோவில் கல்முனை, அக்கரைப்பற்று பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பெற்று அவரிடம் வழங்கினர்.

இந்த நிலையில், தடை உத்தரவை மீறி இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனடிப்படையில் நாடாளுமன்ற உறப்பினர் த.கலையரசனின் வீட்டிற்கு இன்று காலை 9 மணிக்கு திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களின் பொலிசார் சென்று அவரிடம் சுமார் 3 மணிநேர விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

இதேவேளை தடை உத்தரவை மீறி பேரணில் கலந்துகொண்ட த.கலையரசனுக்கு எதிராக பொலிசார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்து எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...