யாழ்ப்பாணம் மிருசுவில் ஏ ஓன்பது வீதியை அண்டிய ஆசிப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் எட்டு குடும்பங்களுக்கு சொந்தமான 52 ஏக்கர் குடிமணை காணிகளை இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவுக்கு நிரந்தர முகாம் அமைக்க யாழ்ப்பாணம் நில அளவை திணைக்களம் அளந்து சுவீகரிக்க இன்று எடுக்கப்பட்ட முயற்சி எமது பலத்த எதிர்ப்புகள் மற்றும் படை உயர் அதிகாரிகளோடும் ஏற்பட்ட கடும் வாக்கு வாதங்கள், எதிர்ப்புகள் காரணமாக இன்று அம்மக்களின் காணிகள் பாதுகாக்கப்பட்டதோடு நில அளவை நடவடிக்கைகளும் தடுத்து நிறுத்தப்பட்டது.


நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்து கொண்டார்.











