ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற நிலையில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ள நிலையில், 14 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன.
குறிப்பாக இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லிபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.