28.6 C
Jaffna
Wednesday, April 21, 2021

தலைமன்னார் விபத்தில் அதிகரிக்கும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை

அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து தலைமன்னார் பியர் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், பாடசாலை மாணவர்கள் பயணிகள் என 25 பேர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை(16) மதியம் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த போது தலைமன்னார் பியர் பகுதியில் வைத்து மதியம் 2 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகியது.

இதன் போது குறித்த பேருந்து பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என சுமார் 25 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

-இந்த போது குறித்த விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் பயணிகள் என 24 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

-தற்போது காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக இறுதி வழங்க விரும்புபவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற நிலையில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

இளம் வயதினருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள்…

இலங்கையில் இளம் வயதினருக்குக் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.நாட்டில் தினசரி கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும்...

இரட்டை முகவராக செயற்படும் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டதென மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் தவிர்த்துக்கொள்ள வேண்டும்....

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம்...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இளம் வயதினருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள்…

இலங்கையில் இளம் வயதினருக்குக் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.நாட்டில் தினசரி கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும்...

இரட்டை முகவராக செயற்படும் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டதென மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் தவிர்த்துக்கொள்ள வேண்டும்....

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம்...

கொரோனா தொற்றுக்குள்ளான 367 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 367 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,105 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 620 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...