March 3, 2021, 8:30 pm

“தமிழ் தேசியப் பேரவை” உருவாக்க தீர்மானம்!

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்று (21) இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்ட அதேவேளை, கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை.

இன்றைய கூட்டம் தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய 10 கட்சிகள், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முதலாவது வரைபு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல விடயங்களை ஆராய்ந்துள்ளோம்.

கூட்டத்தில், முக்கியமாக இரண்டு விடயங்கள் பேசப்பட்டன. இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி வவுனியாவில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகளும், வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதின முதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடவுள்ளோம்.

அதில், முக்கியமாக தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கைகள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.வின் முதலாவது வரைபில் சரியான முறையில் பிரதிபலிக்கப்படவில்லை. அது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற விடயமாக சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆகவே, வரைவு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சரியான தீர்வினைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். அந்த விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்கள். ஆனால், அந்த முதலாவது வரைபில் அவை உள்ளடக்கப்படவில்லை. எனவே, வரும் 26ஆம் திகதி அடுத்தக்கட்டமாக இதற்கு என்ன செய்வது என்பது பற்றி ஆராய்வதற்காக ஒன்றுகூடிப் பேசவுள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக் கூறுதல் தீர்வு என்பது முக்கியமானது என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இது சர்வதேச அரசியலுக்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகள், பொறுப்புக்கூறல் போன்றவற்றை சர்வதேச சமூகம் உண்மையாக உணர்ந்து அந்த அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

அடுத்தக் கட்டமாக தற்போது நாங்கள் 10 கட்சிகள் கூடி பேசிக் கொண்டிருக்கின்றோம். தமிழர் தரப்பில் இருக்கக் கூடிய ஏனைய கட்சிகள்கூட இணையலாம்.

நாங்கள் இந்த பத்துக் கட்சிகளையும் மிகவிரைவாக, ஒரு தமிழ் தேசியப் பேரவையாக உருவாக்குவதற்கான கோரிக்கை இப்பொழுதும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த கோரிக்கை இங்கு வந்திருந்த அனைத்துக் கட்சியினராலும் பேசப்பட்டது.

எனவே, இவ்விடயம் குறித்து பேசப்படவுள்ளதுடன், வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கூடி தமிழ் தேசியப் பேரவை உருவாக்குவது பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

வரும் 28ஆம் திகதி, ‘தமிழ் தேசியப் பேரவை’ உருவாக்கப்படுவதுடன் அந்தப் பேரவையானது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டக்கூடிய சாத்தியப்பாடான முடிவுகளை எடுப்பதற்காகச் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்!! அரசியலில் இருந்து விலகினார் சசிகலா

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து...

தற்கொலை செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் !

தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த, வரிசையில்...

ஆப்கானில் ஊடக ஊழியர்கள் சுட்டுக் கொலை !

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நேற்று மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ்...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்!! அரசியலில் இருந்து விலகினார் சசிகலா

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து...

தற்கொலை செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் !

தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த, வரிசையில்...

ஆப்கானில் ஊடக ஊழியர்கள் சுட்டுக் கொலை !

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நேற்று மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ்...

பரீட்சை நிலையங்களுக்கு அருகில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்போரை கைது செய்ய நடவடிக்கை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெறும் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி துண்டு பிரசுரங்களை விநியோகிப்பவர்களை கைது செய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை...

மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் – கிளிநொச்சியில் பரிதாபம்

தனது 2, 5 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுடனேயே குறித்த தாய் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.https://youtu.be/e8HwlFygWekதாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு வயதுப் பிள்ளையின் சடலத்தை மாத்திரம் மீட்டுள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.கிளிநொச்சி...