March 4, 2021, 9:13 am

புலனாய்வுப்பிரிவினர் அட்டகாசம்!!

வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுப் பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை மறித்த புலனாய்வாளர்கள் எங்கே சென்று வருகிறாய் என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த இளைஞன் இது வீதி. இதனால் போய்வர முடியாதா? எனக் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞனை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து வெற்றிலைக்கேணி மயானப் பகுதியில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தனது மகனை புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றதை கேள்வியுற்ற தாயார் மயானப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற தாயை கண்டதும் மகன் விம்மி விம்மி அழுதுள்ளார். ஏன் எனது மகனை அடித்தீர்கள் என புலனாய்வாளர்களை கேட்டதற்கு இல்லை தாங்கள் அடிக்கவில்லை என கூறியுள்ளனர்.

தொடர்ந்து மகனை அழைத்துச் சென்ற தாயார் அவரை யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார்.

அவர் தற்போது யாழ். போதனா மருத்துவமனை 24 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்

Related Articles

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிப்பதற்கான சலுகை காலம் நீடிப்பு

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 2021 மே 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தாமதமாக புதுப்பிக்க விதிக்கப்பட்ட அபராதம் இந்த காலகட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சகம்...

யாழ். மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும்...

சடலங்களை புதைத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து …

இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிப்பதற்கான சலுகை காலம் நீடிப்பு

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 2021 மே 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தாமதமாக புதுப்பிக்க விதிக்கப்பட்ட அபராதம் இந்த காலகட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சகம்...

யாழ். மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும்...

சடலங்களை புதைத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து …

இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

சிவராத்திரி விரத ஏற்பாடுகளுக்காக ஆலயங்களுக்கு நிதியுதவி

மஹா சிவராத்திரி விரதத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் 11 ஆம் திகதி...

செனட் அடியின் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளார் பாகிஸ்தான் பிரதமர்

நாட்டின் செனட் தேர்தலில் ஒரு முக்கிய ஆசனத்தில் தோல்வியை சந்தித்த பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் பாராளுமன்றத்தில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என்று கட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.இம்ரான் கானின்...