தமிழ்த்தேசத்தின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு நீதி வேண்டி பொது அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான நடைபயணத்தில் கலந்து கொண்டமைக்கு வாக்குமூலம் பெறுவதற்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு. சுரேன் மற்றும் உப தவிசாளர் கஜன் உறுப்பினர்களான ரமேஷ், வீரவாகுதேவர் ஆகியோரை வாக்குமூலம் பெறுவதற்காக பளை போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை தொலைபேசி மூலம் அழைத்துள்ளனர் என குறிப்பிட படுகின்றது.