February 27, 2021, 1:03 pm

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பதவி நீக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை!!!

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச ஊழியர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.

நாட்டின் மனித உரிமைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

அனைத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் உடனடியாக, விரிவாக பக்கசார்பற்ற விசாரணைகளை முன்வைக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பெச்சலட் தமது வருடாந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

நீண்ட கால வழக்குகளுக்கு பொறுப்புக்கூறும் விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குமாறும் அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறலை பலப்படுத்தி உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு விடயத்தில் மறுசீரமைப்புகளை அமுல்படுத்துமாறும் மிச்செல் பெச்சலட் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்றாற்போன்ற புதிய சட்டம் மாற்றீடு செய்யப்படும் வரை கைது நடவடிக்கைகளில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த தடை விதிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி பொது மன்னிப்பு போன்ற விடயங்களிலும் தரமான நடைமுறைகளை அமுல்படுத்துமாறும் அவர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை முடக்குவதுடன், பயணத்தடை போன்ற தடைகளை விதிப்பது தொடர்பில் ஆராயுமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் உறுப்பு நாடுகளுக்கு ஆணையாளர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கையின் பங்களிப்பு தொடர்பில் தொடர்ந்தும் மதிப்பீடு செய்யுமாறு ஐ.நா-வின் ஏனைய நிறுவனங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வருடாந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றம் ?

பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்கவிருக்கிறது.ஆனால் இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு...

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றம் ?

பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்கவிருக்கிறது.ஆனால் இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு...

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

கமலுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும்...