March 4, 2021, 9:23 am

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????

இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கவும் ஒரு சர்வதேச பொறிமுறையை அமைக்கவும் அவா் பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளவா்களின் சொத்துக்களை முடக்கவும் பயணத் தடை விதிக்குமாறும் தனது பரிந்துரைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கேல் பேச்லெட் முன்வைத்துள்ளதாகவும் கசிந்துள்ள அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளிக்க ஜனவரி 27 வரை அவகாசம் உள்ளதாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாக சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்படாதவை.

இதனைவிட இந்தச் சமயத்தில் முற்றிலும் பொருத்தமற்றவை என நாங்கள் கருதும் சில விடயங்களும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ளன.

எங்களை இழிவுபடுத்த முயற்சிக்கும் சில நாடுகளையும் விட இலங்கை மிகவும் அமைதியானதாகவும் நிலையானதாகவும் உள்ளதாகவே நாங்கள் உணர்கிறோம் எனவும் ஜெயநாத் கொலம்பேஜ் கூறியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை இது முந்தைய அறிக்கைகளை விட மோசமானது. இப்போது ஆபத்தான போக்கு உருவாகி வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 30/1 தீர்மானத்தில் முந்தைய அரசு வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றியுள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கை புல்பெயர் தமிழர்களின் செல்வாக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவ நாங்கள் நம்புகிறோம் என அட்மிரல் கொலம்பேஜ் கூறியுள்ளார்.

Related Articles

இறப்பர் செய்கையை மேலும் மேம்படுத்துவதற்கான குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

இறப்பர் செய்கையை மேலும் மேம்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்த குழுவிற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் தலைமை தாங்கவுள்ளார்.இறப்பர் செய்கையின் போது எதிர்நோக்கப்படும் பிரச்சினை, புதிய உற்பத்திகள் தொடர்பில்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் – மூடப்பட்டது தாஜ்மஹால் !

வெடிகுண்டு அச்சுறுத்தலால் சுற்றுலாப் பயணிகளை அதிகளிவில் ஈர்க்கும் தாஜ்மஹால் இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.இந்தியாவின், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் வளாகத்திற்குள் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தின் பின்னர் வெடிக்கும் என்று உத்தரபிரதேச பொலிஸாருக்கு...

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிப்பதற்கான சலுகை காலம் நீடிப்பு

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 2021 மே 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தாமதமாக புதுப்பிக்க விதிக்கப்பட்ட அபராதம் இந்த காலகட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சகம்...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இறப்பர் செய்கையை மேலும் மேம்படுத்துவதற்கான குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

இறப்பர் செய்கையை மேலும் மேம்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்த குழுவிற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் தலைமை தாங்கவுள்ளார்.இறப்பர் செய்கையின் போது எதிர்நோக்கப்படும் பிரச்சினை, புதிய உற்பத்திகள் தொடர்பில்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் – மூடப்பட்டது தாஜ்மஹால் !

வெடிகுண்டு அச்சுறுத்தலால் சுற்றுலாப் பயணிகளை அதிகளிவில் ஈர்க்கும் தாஜ்மஹால் இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.இந்தியாவின், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் வளாகத்திற்குள் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தின் பின்னர் வெடிக்கும் என்று உத்தரபிரதேச பொலிஸாருக்கு...

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிப்பதற்கான சலுகை காலம் நீடிப்பு

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 2021 மே 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தாமதமாக புதுப்பிக்க விதிக்கப்பட்ட அபராதம் இந்த காலகட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சகம்...

யாழ். மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும்...

சடலங்களை புதைத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து …

இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...