February 25, 2021, 9:38 pm

யாழ்ப்பாணம் இலுப்பையடிச்சந்தியில் கோர விபத்து!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப் போக்குவரத்து சபை பயணிகளை இறக்கிவிட்டு பஸ் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது யாழ்ப்பாணம் -ஆணைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை திடீரென கடந்த கார் மீது மோதியதில் காரில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (21) இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பஸ் வந்தவேகத்தில் காரினை மோதியதுடன் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் என அருகில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்தையும் , அருகில் உள்ள ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு பகுதியையும் உடைத்து கொண்டு சென்று மோதி நின்றது. இந்நிலையில் ஆடைகள் விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர் ஒருவரின் தலையில் கடும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆடைகள் விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள வாகன சேவிர்ஸ் நிலையத்தின் ஒருபகுதியும் சேதமடைந்ததுடன் அங்கு நின்ற கார் ஒன்று சிறு சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளது. மோதிய போக்குவரத்து சபை பஸ்ஸின் முகப்பு பகுதி கடுமையாக சேதடைந்துள்ளதுடன் ஆசனங்களுடன் உடைந்துள்ளன. பஸ் மோதிய காரில் பயணித்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் தனியார் நிறுவனம் பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்துக்கு அலுவலக விடயமாக வந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

Related Articles

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...