பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் அடிப்படை வேதனமாக ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டையிலிருந்து பேரணியாக சென்ற பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இதற்கு காவற்துறையினர் எதிர்ப்பினை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.