யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் – திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில்
யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிற்கு அருகில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் தொல்லியல் திணைக்களம் அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ளது.
இன்று காலை திடீரென தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் தொல்லியல் திணைக்களத்தை சேர்ந்த எட்டு பேர் அகல்வு பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஷிற்கு பொதுமக்கள் முறைப்பாடளித்ததை தொடர்ந்து அவர் அங்கு விரைந்து சென்றார்.
இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு பொறுப்பான தொல்லியல் திணைக்கள அதிகாரியென நளின் வீரசிங்க என்பவர் தன்னை அடையாளப்படுத்தியதுடன், தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வு பணி நடப்பதாக தெரிவித்தார்.
அதில் அண்மையில் பணிக்கமர்த்தப்பட்ட ஒரு தமிழர் மாத்திரமே காணப்பட்டுள்ளார்.
வலி கிழக்கு தவிசாளர் சென்றபோது, ஒரு பகுதியில் கிடங்கு அகழப்பட்டிருந்தது. பின்னர் அது மூடப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியிலுள்ள புற்களை அகற்றிவிட்டு, அகழ்வு பணிகள் தொடரும் ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன.

