காலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாரா?
அண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக வைத்து போர்க் குற்ற விசாரணைகளை நடத்தும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
மேலும் கூறுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கட்டளையை மீறி அமைச்சரொருவர் பட்டாள ஆராவாரங்களுடன் சென்று அகழ்வாராய்ச்சி தொடங்குவதற்கான நடவடிக்கையை செய்துள்ளார்.
இந்த நாட்டினுடைய நீதித்துறை நியாயமாக நடக்கிறதா?
சிங்கள மக்களுக்கு ஒரு நீதி, சிங்கள தலைவர்களுக்கு ஒரு நீதி, தமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களிலே அவர்களின் நிலங்களை பறிப்பதற்கும், தமிழ் மக்களுக்கும் இன்னொரு வகையான நீதியா?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொன்றவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மிருசுவில் படுகொலையில் ஈடுபட்டவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் இன்னும் சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.