யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்ன.
கிளிநொச்சி வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம் என்பன கொட்டில்களில் காணப்படுகின்ற நிலையில் புத்த விகாரை பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு கொரோனா காலத்திலும் வழிபாடுகள் இடம்பெற்று வந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.