மாணவர் ஒன்றியத்தினருடன் நடத்திய சந்திப்புக்கமைய இன்று அதிகாலை 4 மணியளவில் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா உணவுத் தவிர்ப்பு இடம்பெற்ற கொட்டகை பகுதிக்கு சென்று மாணவர்களை சந்தித்துள்ளார்.
மாணவர்களின் கோரிக்கைகளை நான் ஏற்கின்றேன். அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டது.
அதனால் அனுமதி பெற்று அதனை மீள நானே முன் நின்று நடாத்துவேன் என்று அவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து வாக்குறுதியை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது..
அதன் படி இன்று காலை சுபவேளையில் முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபி கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, தூணைவேந்தர் தலைமையில் மாணவர்களின் பங்குபற்றலோடு இடம்பெற்றது.
மேலும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தர் முள்ளிவாய்கால் கஞ்சி கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.
இந்நிலையில்தான் எமக்கு ஒரு கேள்வியெழுகிறது, யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா பல்கலைக்கழகத்தில் இரவோடு இரவாக செய்த செயல் மூலம், விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைந்து அந்த அமைப்பதை காட்டிக்கொடுத்ததாக மக்களால் துரோகிகள் என்றழைக்கப்பட்டுவரும் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தன் ஆகியோரின் வரிசையில் தமிழினத்தின் மூன்றாவது துரோகியாக மக்களால் பார்க்கப்படுகிறார், என்பதை சமூக வலைத்தளங்களில் ஊடாக அறியமுடிகின்றது.
இப்படியொரு நிலையில்தான் தன்னை நல்லவராக காட்டிக்கொள்ளவும், பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவும், தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை குறைப்பதற்காகவுமே இந்த அதிகாலை அடிக்கல் நாட்டு நாடகம்.
மக்களே நீங்களே ஜோசியுங்கள், யாழ் தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் சொன்னதுபோல் தென்னிலங்கையில் கோத்தா அரசிற்கான செல்வாக்கு சரிவடைந்து செல்கிறது, இந்நிலையில் மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறு எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன, இப்படியிருக்க சரிகின்ற செல்வாக்கை மீட்டெடுக்க அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆயுதம் கடந்த யுத்தம், விடுதலைப்புலிகள் எதிர்ப்பு, அதற்காகத்தான் இந்த பல்கலை வளாகத்திலுள்ள தூபி இடிப்பு சம்பவம் இடம்பெற்றது, அவர்களும் எதிர்பார்த்திருந்தது போல் தூபி இடிப்பு இடம்பெற்றது, உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் எழுச்சிகொண்டு எழுந்தனர், அதன் மூலம் சிங்கள மக்களும் கோபமடைவார்கள் அந்த கோபம் தங்களுக்கு வரும் தேர்தலில் வாக்குகளாக விழும், இவ்வளவுதான் இதன்பின்னால் உள்ள அரசியல்.
நிலைமை இப்படியிருக்க துணைவேந்தரின் பெயர் கெட்டுப்போயிற்றே என்று அரசாங்கம் மீண்டும் அந்த தூபியை அமைக்க அனுமதி கொடுக்கப்போவதில்லை, அதற்கான சந்தர்ப்பம் இப்போதைய சூழலில் 99% இல்லையென்பதே எமது கருத்து.
இப்படியொரு நிலையில்தான் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டது.
அதனால் அனுமதி பெற்று அதனை மீள நானே முன் நின்று நடாத்துவேன் என்று மாணவர்களிடம் வாக்குறுதி அளித்து, முள்ளிவாய்கால் கஞ்சி கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து தனது நாடகத்தில் வெற்றிகொண்டார்.
மாறாக போராட்டம் நடத்தும் பல்கலை மாணவர்களையும், உலக வாழ் கோடிக்கணக்கான தமிழ் மக்களையும் ஒரு துணைவேந்தர் முட்டாள் ஆக்கினார் என்ற பெயர் வரலாற்றில் வராமலிருந்தால் சரி.!!