யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுதூபி இடித்து தகர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் பிரபல திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…
கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது.
முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?