தங்கத்தின் விலை மீண்டும் பாரியளவு அதிகரிப்பு

0
74

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வார இறுதியில் 1,900 அமெரிக்க டொலர்களை கடந்துள்ள நிலையில் இன்று 1,919.98 அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை நூற்றுக்கு 4 வீதமாக அதிகரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்க கொள்வனவாளர்களை கொண்டாக நாடாக இந்தியா உள்ளது. இவ் வருடத்தில் மாத்திரம் தங்க கொள்வனவு நூற்றுக்கு 30 வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று இலங்கையில் 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலை 11,352.73 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 10,409.51 ரூபாயாகவும் காணப்படுகின்றது.