அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் மீட்பு

0
1

மேற்காசிய நாடான ஈராக்கில், ஓவிய அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த, ஜெர்மனியின் ஹெல்லா மேவிஸ் என்பவர், சில தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர், அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டறிந்த பாதுகாப்புப் படையினர், நேற்று அதிகாலை அவரை பத்திரமாக மீட்டனர்.