சூர்யாவுக்கு சர்ப்பிரைஸ் பரிசு..!

0
5

சூரரைப்போற்று படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இப்படத்தை வீ கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

தனுஷ் நடிப்பில் மாபெரும் ஹிட்டான அசுரன் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தியது என்ற தகவலால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் பின்புறம் ஜல்லிக்கட்டுக் காளைகள் போன்ற சிற்பங்கள் இருக்க, கிராமத்து லுக்கில் கழுத்தில் தாயத்துடன் மிரட்டலாக சூர்யா இருக்கிறார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பிரச்சினை தீர்ந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காட்டுப்பயலே பாடல் வெளியீடு இது தவிர முன்னமே அறிவிக்கப்பட்டபடி, சூரரைப் போற்று படத்திலிருந்து காட்டுப்பயலே பாடல் ஒரு நிமிட வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். பாடல் வரிகளும் சரி, வீடியோ காட்சிகளும் சரி கொஞ்சம் முரட்டு காதலாகவே அமைந்துள்ளது. தெலுங்கிலும் இப்பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.