700 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் 2 பேர் கைது

0
2

சீதுவ-கொடுகொட பிரதேசத்தில் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பாவனைக்கு உதவாத தேயிலைகளை பொதியிடும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராகம மற்றும் ஜாஎல பகுதிகளில் வசிக்கும் 45 மற்றும் 51 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.