கொரோனா ரைவஸ் பரவல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்கள்

0
71

இலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா ரைவஸ் பரவல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் எதிர்ப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்போகும் ஏற்பாடு தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சு இந்த வாரத்தில் முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் பெரும்பாலும் பெரும்பாலும் குறித்த திகதி மீள் அட்டவணைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக ஆகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடலை நடத்தவுள்ளது.