ஒத்திவைக்கப்பட்டது ராஜாங்கனை பிரதேச தபால் மூல வாக்களிப்பு

0
8

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்களிப்புக்கள் இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் அநுராதபுரம் – ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா சூழ்நிலை காரணமாக ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் இன்று இடம்பெறவிருந்த தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார் .

இந்நிலையில், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவிற்கான தபால்மூல வாக்களிப்பு குறித்த புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது