கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 106 பேர் அடையாளம்

0
126

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 106 பேர் நேற்று (12) அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஒருவர் குணமடைந்துள்ளார்.

இலங்கையில் 2,078 ஆவது நபராக அடையாளம் காணப்பட்ட கைதியை அடுத்துஇ தற்போது சுமார் 500 பேர் அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,511 இலிருந்து 2,617 ஆக அதிகரித்துள்ளதுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,980 இலிருந்து 1,981 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 950 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 906 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர். குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 895 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டவர் 31 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 820 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 851 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,617 பேரில் தற்போது 613 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 1,981 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 11 பேர் இது வரை மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 99 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.