நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா

0
1

பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் தனது டுவிட்டர் கணக்கிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

77 வயதுடைய அவர் நானாவதி வைத்தியசாலயில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தன்னுடைய வீட்டில் வேலை செய்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய தயாராகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவேற்றியுள்ள இடுகை இவ்வாறு அமைந்திருந்தது.