கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம்

0
28

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 13 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 12 பேர் குணமடைந்துள்ளனர்.

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,081 இலிருந்து 2,094 ஆக அதிகரித்துள்ளதுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,955 இலிருந்து 1,967 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களில் கடற்படையினர் 04 பேர் உள்ளடங்குகின்றனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 949 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 905 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர். குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 892 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டவர் 31 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 800 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 831 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,094 பேரில் தற்போது 116 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 1,967 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 56 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.