குமார் சங்கக்காரவிடம் 9 மணிநேரம் விசாரணை

0
8

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று , விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் விஷேட பொலிஸ் பிரிவில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இன்று காலை 9 மணிக்கு ஆஜராகிய அவர் சுமார் 9 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று மாலை அங்கிருந்து வெளியேறினார்.

இதேவேளை, 2011ம் ஆண்டில் நடந்த உலககிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து இந்த விசாரணை பிரிவில் இலங்கை அணி முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஆஜராகவுள்ளார்.