150 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

0
1

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மலேசியாவில் சிக்கித் தவித்த 150 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமாத்தின் ஊடாக அவர்கள் இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.