இலங்கை பொதுத் தேர்தல்-2020: முதலாவது முடிவு ஆகஸ்ட்-6ம் திகதி பி.பகல் 4 மணிக்கு வெளியாகும்!

0
7

நடைபெறவுள்ள இலங்கை பொதுத்தேர்தல்-2020 இன் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் ஆகஸ்ட்-6ம் திகதி பி.பகல் 4.00 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவிக்கையில்,

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் எனவும், அதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவிக்கையில்,

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் எனவும், அதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.