செல்வம் அடைக்கலநாதன் ஒரு போதைப்பொருள் வியாபாரி – கருணா

0
3

“ரெலோ அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் போதைப்பொருள் வியாபாரி. என்னை விமர்சிக்க அவருக்கு வெட்கமில்லையா?”

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-“மன்னாரில் போதைப்பொருள் வியாபாரம் செய்து அரசியலுக்கு வந்தவரே செல்வம் அடைக்கலநாதன். இப்போதும் அவர் அந்த வர்த்தகத்தை இரகசியமாகச் செய்து வருகின்றார்.

இப்படியானவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கின்றது. அதுமட்டுமல்ல மீண்டும் பொதுத்தேர்தலில் போட்டியிட அவருக்கு சம்பந்தன் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

எனவே, ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்” – என்றார்.