கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 05 பேர் அடையாளம்

0
21

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 17 பேர் குணமடைந்துள்ளனர்.

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,037 இலிருந்து 2,042 ஆக அதிகரித்துள்ளதுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,661 இலிருந்து 1,678 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 40 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.