கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 04 பேர் அடையாளம்

0
25

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 04 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 22 பேர் குணமடைந்துள்ளனர்.

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,033 இலிருந்து 2,037 ஆக அதிகரித்துள்ளதுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,639 இலிருந்து 1,661 ஆக இன்று அதிகரித்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 947 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 904 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர். குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 823 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டவர் 30 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 773 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 2,037 பேரில் தற்போது 365 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 1,661 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனதுடன் 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 51 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.