சேடம் இழுத்த விக்கி தூக்கி நிறுத்த போவது எதை ?

0
24

மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதை விக்கினேஸ்வரன் அணியினர் உணரப்போகின்ற காலம் இதுவே ,குறிப்பாக வடக்கு மாகாணசபையை வெறும் சபையாக மட்டும் பயன்படுத்தி தர்க்கங்களை ஊழல்களையும் செய்ய காரணியாக இருந்த விக்கி வடக்கில் எந்த அபிவிருத்தியையோ ,அல்லது பொருளாதார சீர்திருத்தலையோ செய்யவில்லை .

சபையில் எப்போதும் ஏட்டிக்கு போட்டியை வரவழைத்து அதை தீர்க்க முடியாமல் வெறும் குடும்ப வாழ்க்கை போல மாகாணசபை மாற்றிவிட்டு இப்போது பாராளுமன்றத்தில் எதை வரவழைக்க வாக்குக்காக இறங்கி இருக்கிறார் ?

வெறுமனே நீதியரசர் என்ற அங்கீகாரம் மட்டும் மக்களின் கண்ணீரை துடைக்க சரியான போதுமான தகுதியாகுமா?

மக்கள் வழங்கிய முதலமைச்சர் என்ற பெரும் பதவியை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தாமல் தனது அடுத்த கட்ட நகர்வுக்கு தாரைவார்த்து விட்டு இப்போது பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற முயல்வதும் மக்களுக்கு எதை செய்ய போகின்றேன் என்ற இலக்கில்லாமல் ,பணம் இல்லை என்ற நாடகம் மூலம் அனுதாப வாக்கை பெற முயல்வதும் என்ன நாடகம் .
மக்களை முட்டாளாக பார்க்கும் விக்கி போன்றவர்கள் அரசியலுக்கும் தமிழ் மக்களின் எந்த போக்குக்கும் சரிப்பட்டு வராதவர்கள் .

இம்முறை இதனை விக்கினேஸ்வரன் உணர்வார் . கூட்டமைப்பின் அங்கீகாரத்துடன் மக்கள் வாக்குகளை பெற்ற விக்கி இம்முறையும் தனக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவது எவ்வளவு மடமை ?வடக்கில் கிடைத்த சந்தர்ப்பத்தில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய விக்கி தான் என்ன தவறை விட்டேன் என்பதை இந்த தேர்தலில் உணர்வார் .

மக்களை மதிக்காத மக்களின் உணர்வை மதிக்காத விக்கியை மக்கள் இம்முறை சோதிப்பர் .