மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு

0
8

தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள ஆனந்தசங்கரி,  விக்னேஸ்வரன் எனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.​

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரியின் 87ஆவது பிறந்த தினம், கட்சியின் இணையத்தளமும் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் கட்சிக்கு இதுவரை யாரும் நிதி உதவி செய்யவில்லை. யாராவது நிதியுதவி தந்திருந்தால் அதை எங்களுக்கு பகிரங்க படுத்துங்கள். எந்த கட்சிக்கும் தற்பொழுது நிதி உதவி தேவைப்படுகின்றது அதைவிட விக்னேஸ்வரன் அவர்கள் தமது கட்சிக்காக நீதிகோரி இருக்கின்றனர்.

நாங்கள் நடத்தப் போவது சாத்வீகப் போராட்டம். எங்களுக்கும் நிதி தேவையாக உள்ளது. நான் இல்லை என்று சொல்லவில்லை. சீ.வி.விக்னேஸ்வரன் இத்துடன் நிறுத்திக் கொண்டு எங்களது கட்சியில் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்றார்.

நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள், இளைஞரணி என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.