தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவுக்கு பலி!

0
3

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தமிழக தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெ.அன்பழகன், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகப் பணியாற்றி வந்ததுடன் இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்தவர் ஆவார்.

இதேவேளை அன்பழகன் 1958 – ம் ஆண்டு ஜூன் 10- ந் தேதி பிறந்தார். தற்போது அவருக்கு 62 வயதாகிற நிலையில் அவரது பிறந்ததினத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.