நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே எமது அடுத்த செயற்பாடுகள்! – தேர்தல்கள் ஆணையாளர் கருத்து

0
2

“ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், பொதுத்தேர்தல் தொடர்பில் எமது செயற்பாடுகளை இப்போது முன்னெடுக்க முடியாது. நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே எமது அடுத்தகட்ட பணிகளை நாம் ஆரம்பிக்கலாம். அவை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கவும் முடியும்.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நீதிமன்றத் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் ஏற்கனவே திட்டமிட்டமாறு ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது கடினம். பிறிதொரு தினத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். எனினும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்க முடியும். அதுவரைக்கும் நாம் பொறுமை காக்க வேண்டும்” – என்றார்.