புலிகளைப் புகழ்ந்து தள்ளும் விக்கி கொடூர தமிழ் இனவாதி – மஹிந்த அணி

0
12

தமிழீழ விடுதலைப்புலிகளைப் போற்றிப் புகழந்து வரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொடூர தமிழ் இனவாதி என்று மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தமிழினத்துக்காகப் போராடியவர்கள் என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை தவறான கருத்தாகும் என்று புதிய ஹெல உறுமய அமைப்பின் உப தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டாலும் அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் தமிழ் அரசியல்வாதிகள் அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றார்கள்.

விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் இனவாத வெறுப்புக்களைத் தூண்டிவிடுகின்றார். எனினும், நாட்டில் இனவாத வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் தோற்றம் பெறாத அளவுக்கு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.