யாழில் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் சேதம் – விவசாயிகள் கவலையில்……

0
5

யாழில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் நீர்வேலி, கோப்பாய், புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வாழைத் தோட்டங்கள் அழிவடைந்துள்ளன.

பல வாழைகள் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. வாழை குலைகள் முற்ற முதல் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பல விவசாயிகள் தமது விளைபொருட்களை சரி வர சந்தைப்படுத்த முடியாத நிலையில் நஷ்டப்பட்டுப் போயுள்ள சூழலில் வாழை, பப்பாசி போன்ற இலகு மரங்கள் கடும் காற்றினால் சேதமடைந்து விவசாயிகளை மேலும் கவலையுள் ஆழ்த்தியுள்ளது.