அம்பன் சூறாவளி புயலின் தாக்கம் இன்று முதல் குறைந்து செல்லும்

0
4

இலங்கையின் திருகோணமலை, குடாவெல பகுதியியை சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பன் சூறாவளியின் தாக்கம் காரணமாக பலத்த அலைகளால் குறித்த படகுகள் இந்தோனேசியா கடற்பரப்புக்கு அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடிந்ததுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை இலங்கையில் அம்பன் சூறாவளி புயலின் தாக்கம் இன்று முதல் குறைந்து செல்லும் நிலைகாணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.