குவைத்தில் இருந்து இலங்கை வந்தவருக்கு கொரோனா தொற்று

0
34

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1028ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஒரேயொரு நோயாளி மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளி நேற்றைய தினம் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களில் ஒருவர் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 435 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற அதேவேளை நேற்றைய தினம் வரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 584 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் கொரோனாவைரஸ் தொற்று காரணமாக மொத்தமாக 9 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.