தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
3

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பலத்த மனித உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்றானது கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்றுவரை தமிழகத்தில் 10 ஆகக் காணப்பட்ட உயிரிழப்பு, தற்போது 11ஆக உயர்வடைந்துள்ளது.

சென்னை, புளியந்தூரைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் ஓமந்தூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளமையினைத் தொடர்ந்து குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுவரை கொரோனாவைரஸ் பாதிப்புக்கு உள்ளான 969 பேர் தமிழகத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினை தமிழகத்தில் எதிர்வரும் 30 திகதி வரைநீடிப்பதற்கு தமிழக அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.