சீனாவை பின்தள்ளி உலகில் வியாபித்தது கோவிட்-19

0
8

கோவிட்-19 வைரஸ் தொற்று என்றால், சீனாவை மையப்படுத்திய பேச்சு அருகும் வகையில், நோய்த் தொற்று எண்ணிக்கையிலும், இறப்பு எண்ணிக்கையிலும், சீனாவின் எண்ணிக்கைகளைக் கடந்து, இன்று மார்ச் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, நகர்ந்துவிட்டது கொவிட்-19. இதுவைரையிலான நோய்த் தொற்று எண்ணிக்கையிலான சீனாவின் எண்ணிக்கை, 80 ஆயிரத்து 849 ஆகும். ஆனால் சீனாவிற்கு வெளியில் ஏனைய அனைத்து நாடுகளிலுமான மொத்த நோய்த்தொற்று எண்ணிக்கை, இன்று சீன எண்ணிக்கையை முதல் தடவையாகக் கடந்து, இதை நான் பதிவிடும் வேளையில், 88 ஆயிரத்து 366 ஆகியுள்ளது. அதனால் உறுதிப்படுத்தப்பட்ட உலகளாவிய மொத்த எண்ணிக்கை, 1 லட்சத்து 69 ஆயிரத்து 215 ஆகியுள்ளது. சமீபகால நோய்த்தொற்றுக்களான, “சார்ஸ்”, “சுவைன் புளு”, “இபோலா”, “மீர்ஸ்” ஆகியவற்றை விட, கோவிட்-19 இன்; தொற்றின் வேகம் மிக அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளது. சீரிய உடல்நிலையைக் கொண்ட இளைய வயதினர் பலர், தமக்கு நோய்த்தொற்று ஏற்ப்பட்டது அல்லது ஏற்பட்டுள்ளது என்பதை, உணரும் வகையிலான அறிகுறிகளை வெளிப்படுத்தும் வாயப்பு இல்லை, என்பதால் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கை, இதைவிடப் பல மடங்காக இருக்கும் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

இருக்க கோவிட்-19 நோய்த் தொற்றினால், இறந்தவர்களின் சீனாவிலான இதுவரையிலான எண்ணிக்கை 3,199 ஆகும். ஆனால் மார்ச் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, சீனாவைக் கடந்த ஏனைய உலகளாவிய நாடுகளில், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,300 ஆகியுள்ளது. இதனால் கோவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை, 6,499 ஆகியுள்ளது. முன்னைய பதிவொன்றில் மார்ச் 15ஆம் நாள், இறப்புகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடக்கும் என்றிருந்தேன். தற்போதைய நிலையில், மார்ச் 16ஆம் நாள் திங்கட்கிழமை, இறப்புக்கனின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடப்பதும், மார்ச் மாத முடிவுக்குள், அது 10 ஆயிரத்தை கடப்பதுவும் தவிர்க்க முடியாத யதார்தமாகியுள்ளது. இங்கும் இது உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையே. அதைக்கடந்தும் இறப்புக்களின் எண்ணிக்கை சில மடங்கு அதிகமே. 21 நாட்கள் எடுத்துக் கொண்டு, பெபிரவரி 10ஆம் நாள், இறப்புக்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. பின்னர் எட்டு நாட்களில், பெப்பிரவரி 18ஆம் நாள், இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தது. பின்னர் 12 நாட்களின் பின்னர், மர்ர்ச் 1ஆம் நாள், 3 ஆயிரம் இறப்புகள் எண்ணிக்கை எட்டப்பட்டது. பின்னர் 8 நாட்களில், மார்ச் 9ஆம் நாள், 4 ஆயிரம் எண்ணிக்கை எட்டப்பட்டது. பின்னர் 4 நாட்களிலேயே, மார்ர்ச் 13ஆம் நாள், 5 ஆயிரத்தைக் கடந்துள்ளோம். ஆனால் தற்போது, வெறும் இரண்டு நாட்களிலேயே, இறப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் ஒரு நாளை எடுத்துக் கொண்டு, மார்ச் 16ஆம் நாள் திங்கட்கிழமை, அது 7 ஆயிரத்தை கடக்க உள்ளமை நோய்த் தொற்றின் தீவிரத்தை, அபாய எச்சரிக்கையாக வெளிப்படுத்துகிறது. இதுவே பல நாடுகளும், கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து, நோய்த் தொற்றின் வேகத்தை குறைக்க முனைவதின் பின்னணியாகும். அதேவேளை கோவிட்-19 நோய்த் தொற்றின், அதிகரித்துச் செல்லும் வேகத்தையும், அதனால் ஏற்ப்படும் அதிகரித்த இறப்புக்களின் எண்ணிக்கையும், கீழ்வரும் தரவுகளை கவனத்தில் கொள்வதினூடாக நீங்கள் அவதானிக்கலாம்.
அடைப்புக்குறிக்குள் அன்றைய சீனாவின் எண்ணிக்கையையும் கவனத்தில் கொள்ளலாம்.

நாள் —- புதிய நோய்த்தொற்றாளர்கள் — இறப்புக்கள்
மர்hச் 15 — 12748 (10) —— 668 (8)
மார்ச் 14 — 11139 (20) —— 404 (10)
மார்ச் 13 — 10907 (11) ——- 448 (13)
மார்ச் 12 — 8362 (20) ——— 353 (7)
மார்ச் 11 — 7266 (15) ——— 332 (11)
மார்ச் 10 — 4567 (24) ——— 271 (22)
மார்ச் 9 — 4390 (19) ——— 198 (17)
மார்ச் 8 — 3892 (40) ——— 228 (22)
மார்ச் 7 — 4049 (44) ——— 105 (27)