463 பேர் பலி.. இனி எந்தப் போட்டியும் நடக்கக் கூடாது… இத்தாலி அரசு முடிவு!!

0
11

சீனாவில் 3200 பேர் உயிர் இழந்துள்ளநிலையில், சீனாவைத் தாண்டி இத்தாலியில் இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இத்தாலியில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 463 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி அரசு பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, கட்டுக்குள் கொரோனோ வைரஸினைக் கொண்டு வர முடியவில்லை என்றால், இதன் பாதிப்பு தீவிரமாகும் என்பதால், இத்தாலி அரசு பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது தற்போது நடைபெறவிருக்கிற விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதாக இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.

463 பேர் பலி.. இனி எந்தப் போட்டியும் நடக்கக் கூடாது… இத்தாலி அரசு முடிவு!!

அந்த வகையில் இத்தாலியின் முதன்மையான கால்பந்து லீக்கான செர்ரி ஏ தொடர் ஐந்து போட்டிகள் கொண்ட ஆட்டமாக மார்ச் 1 ஆம் தேதி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இத்தாலி அரசு கடந்த வாரம் ஒரு திடீர் உத்தரவினைப் பிறப்பித்தது, அதாவது இந்த போட்டியானது மூடிய மைதானத்திற்குள் நடைபெறும் என்றும், ஒளிபரப்பு உரிமை பெற்ற டி.வி. நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.

இந்தப் போட்டி நடைபெற்றால் எப்படியும் கொரோனா வேகமாகப் பரவும் என்பதால், மூடிய மைதானத்திலும் நடத்த வேண்டாம் மொத்தமாக கேன்சல் செய்யும் முடிவினை இத்தாலி அரசு எடுத்துள்ளது.

ஏப்ரல் 3 ஆம் தேதி வரை அனைத்து விளையாட்டுகளயும் இத்தாலி அரசு கேன்சல் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.