உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் இந்தியா.. வாழ்த்துகளைப் பதிவிட்டார் பிரதமர் மோடி!!

0
9

பெண்களுக்கான 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியானது இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன. இங்கிலாந்து அணியுடன் அரை இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியப் பெண்கள் அணி, வானிலை மோசமானதன் காரணமாக டாஸ் ஏதும் சுண்டப்படாமல், புள்ளிகள் அடிப்படையில் இறுதிச் சுற்றிக்குள் கால் பதித்தது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் இந்தியா.. வாழ்த்துகளைப் பதிவிட்டார் பிரதமர் மோடி!!

இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையின்  இறுதிப் போட்டிக்குள் கால் பதித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் வெற்றியினை நோக்கி பேராவலில் உள்ளனர்.

இந்திய பெண்கள் அணிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “உலக கோப்பையில் முதல் முறையாக கால் பதித்துள்ள இந்திய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மகளிர் தினமான இன்று, பெண்களின் இத்தகைய உயர்நிலைக்கு என் பாராட்டுகள். இந்திய- ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் வீராங்கனைகளுக்கு என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.