மொர்டசா விலகல்

0
7

வங்கதேச அணியின் கேப்டன் பொறுப்பில் மொர்டசா விலகுகிறார்.

வங்கதேச ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக மொர்டசா 36, உள்ளார். இவர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான  3வது ஒருநாள் போட்டியுடன் (மார்ச் 6) கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். இதுவரை 87 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட இவர், 49 வெற்றி, 36 தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். இவரது தலைமையிலான வங்கதேச அணி 2015ல் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் காலிறுதி வரை சென்றது. பின், 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு முன்னேறியது.

ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு (எதிர்: விண்டீஸ், 2009, இடம்: கிங்ஸ்டன், முடிவு: வங்கதேசம் வெற்றி) கேப்டனாக செயல்பட்ட மொர்டசா, 28 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளுக்கும் (10 வெற்றி, 17 தோல்வி, ஒரு முடிவு இல்லை) கேப்டனாக இருந்துள்ளார்.

கேப்டன் பொறுப்பில் இருந்து மொர்டசா விலகினாலும், தொடர்ந்து வீரராக போட்டியில் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளார்.