சிஎஸ்கே அணி எனக்கு நெறய கற்றுக் கொடுத்தது… சிஎஸ்கே ரசிகர்களை புகழ்ந்த தோனி…

0
12

13 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக தல தோனி சென்னையில் உள்ள மைதானத்தில் பயிற்சி  செய்து வருகிறார்.

ரசிகர்கள் தோனியின் எண்ட்ரி குறித்து, எதிர்பார்த்துக் காத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தோனி எண்ட்ரி கொடுக்க, 8 மாதங்கள் கழித்துப் பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர்.

தோனி நிரூபர் சந்திப்பில் அளித்த பேட்டியில், ‘கிரிக்கெட் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலையை நான் சிறப்பான முறையில் கையாள எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவியது.

வெற்றியே பெற்றாலும் தன்னடக்கத்துடனும், தோல்வி அடைந்தால் தவறுகளை திருத்தி மேம்படுத்திக் கொள்ளவும் சிஎஸ்கே கற்றுக்கொடுத்தது. 

சிஎஸ்கே அணி எனக்கு நெறய கற்றுக் கொடுத்தது… சிஎஸ்கே ரசிகர்களை புகழ்ந்த தோனி…

சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் என்னை தல  என்று அழைப்பது மனதிற்கு மிகவும் நெருக்கமான விஷயமாக உள்ளது. தல  என்பதற்கு சகோதரன் என்று அர்த்தம், அவர்கள் சகோதரன் என்ற அர்த்தத்தில் அழைக்கும்போது என்னை நான் சிறப்பானவனாக உணர்கிறேன்.

அவர்கள் அன்பையும், பாசத்தையும் கூடுதலாக வைத்திருக்கிறார்கள் என்பதை இந்தச் சொல் உணர்த்துகின்றது. என்னை சர்வதேச அணியில் விளையாடும்போதும் கூட தல என்று சொல்லியே அழைக்கிறார்கள்.

தல என்று ஒருவர் அழைத்தால் நிச்சயம் அவர் சிஎஸ்கே அணியின் ரசிகன் என்றே நான் நினைத்துக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.