500 போட்டிகளைக் கடந்த முதல் வீரர்

0
22

T-20 கிரிக்கெட்டில் 499 போட்டிகளில் விளையாடியுள்ள மேற்கிந்திய் தீவுகளின் அதிரடி வீரரும் T-20 அணி தலைவருமான கீரான் பொலார்ட் (Kieron Pollard) இன்று இலங்கை அணியுடனான முதலாவது T-20 போட்டியில் பங்கேற்பதன் மூலம் T-20 வரலாற்றில் 500 போட்டிகளைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

இன்று மாலை கண்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருக்கும் T-20 போட்டியை வென்று பொலார்ட்டின் சாதனைக்கு பரிசளிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி மும்முரமாக உள்ள நிலையில் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இது தவிர பொலார்ட் T-20 கிரிக்கெட்டில் படைத்துள்ள சாதனைகள் வருமாறு,

T-20 தொடரின் இறுதிப் போட்டிகளில் அதிக தடவை (23) இடம்பிடித்த முதல் வீரர்

17 அணிகளுக்காக விளையாடியதன் மூலம் T-20 போட்டிகளில் அதிக அணிகளை பிரதிநிதித்துவம் செய்து விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

வெவ்வேறு 6 அணிகளின் சார்பில் 13 T-20 தொடர்களை தலைமைதாங்கி வென்றுள்ளார்.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 உலகக்கிண்ணத்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஒருவராக இருந்துள்ளார்.

T-20 போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது வீரராவார். மே.இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் முதலாவது விரர் என்ற சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 170 போட்டிகளில் விளையாடியுள்ளதன் மூலம் ஒரு அணிசார்பாக அதிகமான T-20 போட்களில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனைக்கும் பொலார்ட் சொந்தக்காரராகியுள்ளார்.