இனிமேல் சியர்ஸ்தான்; பியர் குடித்தால் மனிதர்களின் ஆயுள் அதிகரிக்கும்

0
138

நாளாந்தம் கால் லீற்றர் பியர் குடித்தால் மனிதர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்று நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. பியட் வான் டன் ப்ராண்டட் என்பவர் முன்னின்று நடத்திய இந்த ஆராய்ச்சியில், இருபது வருடங்களாக ஏறக்குறைய 5500 பேரின் மது அருந்தும் பழக்கங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வெளியிட்டுள்ள இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் குறித்து லண்டனில் இருந்து வெளியாகும் இணையதளம் ஒன்றுக்கு பியட் வான் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவில் லீற்றர் அருந்தும் அளவுகளைப் பொறுத்த வரை ஒரு ‘பிண்ட்’ என்பது ஆசிய அளவில் ஏறக்குறைய 473 மி.லி ஆகும்.) அதைக் கணக்கில் கொண்டு தினசரி அரை பிண்ட் (286 மி.லி) அருந்துபவர்கள், குடிக்காதவர்களை விட தங்களது 90 வயது வரை வாழும் சதவீதம் 81 ஆக அதிகரிக்கின்றது. இதே அளவு மது அருந்தும் பெண்களுக்கு வாழ்நாள் மூன்றில் ஒரு பங்கு அதிகரிக்கிறது.

அதேபோல தினசரி இரண்டு ஷொட்கள் (1 ஷொட் = 90 மி.லி) விஸ்கி அருந்துபவர்கள் மது அருந்தாதவர்களை விட 90 வயது எட்டுவதற்கான வாய்ப்புகள் மூன்றில் இரண்டு பங்கு அதிகரிக்கிறது.

ஆராய்ச்சியின்படி மது அருந்துவதற்கும் அதிக வாழ்நாளுக்கும் தொடர்பு இருக்கிறது. குறிப்பாக மிதமாக மது அருந்துவது இதய நலத்திற்கு நல்லது. ஆனால் அதேசமயம் மிதமிஞ்சி மது அருந்துவது ஆபத்தில் முடியும்.

முக்கியமாக மது அருந்தாதவர்கள் அதிக வாழ்நாளை பெறுவதற்காக மதுஅருந்த ஆரம்பிக்க வேண்டும் என்று இந்த ஆராய்ச்சியின் மூலம் வலியுறுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.